மலைவாழ் பெண்களிடம் அத்துமீறிய விவகாரம் - மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த கேரள வனத்துறையினர்
தென்காசியில் மலைவாழ் பெண்களிடம் அத்துமீறிய விவகாரத்தில் கேரள வனத்துறையினர் நேரில் வந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் அங்குள்ள இரண்டு பெண்கள் மலைப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற போது, கேரள வனத்துறையினர் அவர்களிடம் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தவறை ஒப்புக்கொண்டு சமரச பேச்சுவார்த்தை நடத்திய கேரள வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜர்ப்படுத்துவதாகவும் உறுதியளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து அத்துமீறிய வனத்துறை அதிகாரிகளை வாசுதேவநல்லூர் காவல்நிலையத்தில் கேரள வனத்துறை ஆஜர்ப்படுத்தியது. அப்போது நான்கு பேரும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்தனர்.
Related Tags :
Next Story