குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக மடக்கியதால் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த டிரைவர்


குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக மடக்கியதால் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த டிரைவர்
x

குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக மடக்கியதால் போக்குவரத்து போலீசாருடன் டிரைவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை கோயம்பேடு போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மற்றும் குடிபோதையில் ஓட்டிச்செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தும்படி சைகை காண்பித்தனர். ஆனால் காரை நிறுத்தாமல் அதன் டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார். சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை விரட்டிச் சென்று நெற்குன்றம் பகுதியில் மடக்கி பிடித்தனர். காரில் இருந்து இறங்கிய டிரைவர், தன்னை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகாத வார்த்தையாலும் பேசியதாக தெரிகிறது. இதனை அங்கிருந்த ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்தார். அதனை கவனித்த டிரைவர், அதன்பிறகு மரியாதையுடன் பேசினார்.

விசாரணையில் அவர் டிரைவராக வேலை செய்து வருவதும், குடிபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். பின்னர் கார் உரிமையாளரை வரவழைத்து ஆவணங்களை பெற்று காரை அவரிடம் ஒப்படைத்தனர்.

போக்குவரத்து போலீசாருடன் டிரைவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story