2026-ல் மாநில அரசுகளின் கடன் சுமை அதிகரிக்கும் - ரிசர்வ் வங்கி கணிப்பு
கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் கடன் சுமை, 2026-ம் ஆண்டு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
புதுடெல்லி,
கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய ஆகிய 5 மாநிலங்களின் கடன் சுமை, 2026-ம் ஆண்டு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இந்த மாநில அரசுகளின் செலவினங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2026-ல் கேரளாவின் கடன் சுமை மாநில உள்நாட்டு உற்பத்தியில் 37.2% ஆகவும், ராஜஸ்தானின் கடன் சுமை 39.8% ஆகவும், மேற்கு வங்கத்தின் கடன் சுமை 34.2% ஆகவும், பீகாரின் கடன் சுமை 38.7% ஆகவும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேற்கு வங்காளம், தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களின் வரி வருவாயில் 20%-க்கு அதிகமாக வட்டி செலவுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அதே சமயம் 2026-ம் ஆண்டு தமிழகத்தின் கடன் சுமை மாநில உள்நாட்டு உற்பத்தியில் 27.7% ஆக உயரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.