'சொந்த பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்' - கவர்னர் ஆர்.என்.ரவி


சொந்த பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் - கவர்னர் ஆர்.என்.ரவி
x

50 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் என கவர்னர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜூன் 25, 1975 அன்று, அரசியலமைப்பை குப்பையில் போட்டு, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கி, ஊடகங்களின் வாயைக் கட்டி, நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியில் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும், திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது.

ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, ரைபிள் துப்பாக்கிகளின் கைப்பிடிகளால் தாக்கி, புத்தகங்கள், உடைகளைக் கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை வெளியேற்றிய நாளை நானும், எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்?

சொந்த பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கறுப்பு அத்தியாயம் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில், நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம்."

இவ்வாறு ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.



Next Story