தேர் பவனி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கணபதியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தின் தேர் பவனி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் தேர் பவனி விழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் பவனி விழா வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு தேர்பவனி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பங்கு தந்தைகள் ஜெரோம், ஜேசுராஜ், ஜான் பால் மற்றும் ஆலய பங்கு மக்கள் திரளானவர்கள் பங்கேற்றனர். தேர்பவனி விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, காணிக்கை பவனி நடக்கிறது.
தொடர்ந்து 15-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8.15 மணிக்கு மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருவிழா கூட்டுப்பாடற் திருப்பலி, இரவு 7 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது. 22-ந் தேதி கொடியிறக்கத்துடன் தேர்பவனி விழா நிறைவு பெறுகிறது.