சீனிவாச பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது


சீனிவாச பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது
x

நாட்டறம்பள்ளி அருகே புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டுசீனிவாச பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா அக்ரகாரம் பகுதியில் மலையில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து 5 சனிக்கிழமைகளில் புரட்டாசி விழா நடைபெறுகிறது

அதன்படி இன்று முதலாம் சனிக்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

மேலும் சீனிவாச பெருமாளை காண அக்ரகாரம் மட்டுமின்றி ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை மங்கள இசையும், அதனைத்தொடர்ந்து பிற்பகல் 11.30 மணி முதல் 1 மணி வரை பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அக்ராகரம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story