ஊருணியில் மூழ்கி சிறுவன் பலி

காரைக்குடி அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
காரைக்குடி
காரைக்குடி அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவன்
காரைக்குடி அருகே செட்டிநாடு போலீஸ் சரகம் நேமத்தான்பட்டி கார்கூத்தன் ஊருணி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் கிரிஷ்குமார் (வயது 13) இவன் சம்பவத்தன்று தனது அத்தை புவனேஸ்வரியுடன் சின்ன ஊருணிக்கு குளிக்க சென்றான். புவனேஸ்வரி துணிகள் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கிரிஷ்குமார் ஊருணியில் இறங்கிய போது கால் வழுக்கி விழுந்து மூழ்கி விட்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.
சாவு
உடனே அருகில் இருந்தவர்கள் ஊருணியில் இறங்கி கிரிஷ்குமாரை தேடினர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர். சுமார் ஒரு மணி நேரம் ஊருணிக்குள் இறங்கி தேடினர். அந்த ஊருணியில் கிரிஷ்குமாரை இறந்த நிலையில் பிணமாக மீட்டனர். இதை பார்த்து புவனேஸ்வரி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து செட்டிநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






