தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் ஆலய பெருவிழா கொடியேற்றம்
தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். மும்மதத்தினரையும் குறிக்கும் வகையில் இந்த ஆலயத்தின் முகப்பு வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. அதுபோல் ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் மும்மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் திரளானோர் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 480ஆம் ஆண்டு பெருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியேற்றப்பட்டது. அதில் மும்மதத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 24-ஆம் தேதி அன்று தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.
Related Tags :
Next Story