சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் லஞ்சம் வாங்கிய உதவியாளர் பணியிடை நீக்கம் - டீன் மணி நடவடிக்கை
சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் லஞ்சம் வாங்கிய உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து டீன் மணி உத்தரவிட்டார்.
சேலம்
சேலம்
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியாற்றிய செவிலியரின் உதவியாளர் ஒருவர் அந்த கர்ப்பிணியின் உறவினரிடம் ரூ.1,500 லஞ்சம் கேட்டார். இதையடுத்து உதவியாளர் கேட்ட பணத்தை அவர் கொடுத்தார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும் இதுதொடர்பாக ஆஸ்பத்திரி டீன் மணியிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து டீன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பிரசவ வார்டில் செவிலியரின் உதவியாளராக பணியாற்றும் குப்புலட்சுமி லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து டீன் மணி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story