தர்மபுரி குமாரசாமிப்பேட்டைமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


தர்மபுரி குமாரசாமிப்பேட்டைமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 22 April 2023 12:30 AM IST (Updated: 22 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இடும்பன் பூஜையும், அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடும், மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் கடைசி நிகழ்ச்சியான நேற்று மறுபூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு ஏராளமான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story