அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது - தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன் பேட்டி


அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது - தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன் பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி என்ற நிலைப்பாட்டை எட்டியுள்ளோம் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கட்சிகளுக்கு இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. கட்சியின் அவைத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:-

அ.தி.மு.க. உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி என்ற நிலைப்பாட்டை எட்டியுள்ளோம். இது வெற்றிக் கூட்டணியாக அமையும். தொகுதிகள் குறித்து பேசவில்லை. இறுதி முடிவு ஓரிரு நாளில் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story