அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது - எடப்பாடி பழனிசாமி


அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது -  எடப்பாடி பழனிசாமி
x

கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு-கவின் போராட்டம் தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் தி.மு.க அரசிற்கு எனது கடும் கண்டனம்.

எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரியும் எனது தலைமையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை (27.06.2024- வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம். கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு-கவின் போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story