கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டிற்கு வந்தன


கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டிற்கு வந்தன
x

கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டிற்கு வந்தன.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் திருட்டுகள் போன்றவை நடப்பதை தடுப்பதற்கு அனைத்து கிராமங்களிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று சுத்தமல்லி கிராமத்தில் சுத்தமல்லி பஸ் நிலையம், சிவன் கோவில் தெரு, வளவட்டிகுப்பம் ஜங்ஷன், வடகடல் ஜங்ஷன் ஆகிய 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமை தாங்கி, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். மேலும் அவர் பேசுகையில், தொடர்ந்து குற்ற செயல்கள் நடந்து வருகிறது. அதை தடுக்கும் பொருட்டு அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், அப்படி பொருத்தினால் தான் குற்றங்களை நாம் தடுத்து நிறுத்திட முடியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்


Next Story