விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம்


விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம்
x

மாநிலம் முழுவதிலும் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை,

கடந்த தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து பெரும்பான்மையான ஆம்னி பேருந்துகள் புகார்களுக்கு இடம் அளிக்காமல் செயல்பட்டு வந்தாலும் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வன்னம் இருந்ததால் தமிழக முழுவதிலும் கடந்த 10.01.2024 முதல் 21.01.2024 வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, மாநிலம் முழுவதிலும் 15,659 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.


Next Story