பாலதண்டாயுதபாணி கோவிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி


பாலதண்டாயுதபாணி கோவிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி
x
தினத்தந்தி 5 March 2023 12:44 AM IST (Updated: 5 March 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பாலதண்டாயுதபாணி கோவிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி விழுந்தது.

பெரம்பலூர்

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் மலையின் மீது பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் முருகப்பெருமான் கையில் செங்கரும்பு ஏந்தி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 19, 20, 21 ஆகிய 3 நாட்களில் மாலை நேரத்தில் மூலவர் தண்டாயுதபாணி மீது சூரியஒளி கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை 5.40 மணி முதல் 5.50 மணி வரை கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது. அதேபோல் நேற்றும் சுவாமி மீது சூரிய ஒளி விழுந்தது. இந்த காட்சியை திரளான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 5.40 மணியளவில் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள் விழும் என்று தெரிவிக்கப்பட்டது.


Next Story