குருபகவான் கோவிலில் சூரிய வழிபாடு


குருபகவான் கோவிலில் சூரிய வழிபாடு
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குருபகவான் கோவிலில் சூரிய வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் சூரியபகவானுக்குரிய கோவிலாகும். இங்கு பொங்கல் பண்டிகையையொட்டி சூரிய வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு சூரியபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. கரும்பு, பொங்கல் வைத்து நிவேதனம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், காசிவிசுவநாதர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story