சேலம் சங்ககிரி அருகே லாரி ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு


சேலம் சங்ககிரி அருகே லாரி ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
x

டேங்கர் லாரிகளில் எரிபொருள் நிரப்ப தாமதிப்பதாகக் கூறி, லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நாரப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் டேங்கர் லாரிகளில் எரிபொருள் நிரப்ப தாமதிப்பதாகக் கூறி, லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஓட்டுநர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.


Next Story