சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடி


சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடி
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடியை தாண்டியது. 3 கிலோ தங்கமும் உண்டியலில் செலுத்தி இருந்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடியை தாண்டியது. 3 கிலோ தங்கமும் உண்டியலில் செலுத்தி இருந்தனர்.

உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோவிலில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள காவடிபிறை மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன், உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர்கள் செந்தில்நாயகி, பகவதி, முருகன், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.4.70 கோடி

சிவகாசி பதினெண்சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழுவினர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் நிரந்தர உண்டியலில் ரூ.4 கோடியே 65 லட்சத்து 72 ஆயிரத்து 815-ம், கோசாலை பராமரிப்பு உண்டியலில் ரூ.46 ஆயிரத்து 475-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 543-ம், சிவன் கோவில் உண்டியலில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 373-ம், வெயிலுகந்த அம்மன் கோவில் உண்டியலில் ரூ.52 ஆயிரத்து 299-ம் என மொத்தம் ரூ.4 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 505 செலுத்தி இருந்தனர்.

மேலும் 2 கிலோ 910 கிராம் தங்கம், 42 கிலோ 750 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணம் 977-ம் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


Next Story