பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பரூக் தலைமை தாங்கினார். பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர் ஏ.கே.கரீம், ரத்தினம், முகமது ரஷீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். திருமணம் உள்ளிட்ட வாழ்வியல் நடைமுறைகளில் அவர்களது சடங்குகள் மற்றும் சட்டங்களை பின்பற்றி வருகின்றனர். மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் இந்த பன்முகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story