புயல் எச்சரிக்கை: காரைக்கால் மீனவர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை


புயல் எச்சரிக்கை: காரைக்கால் மீனவர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை
x

புயல் எச்சரிக்கை காரணமாக காரைக்கால் மீனவர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக 8ம் தேதி, 09 மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் காரைக்கால் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் மீனவ கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story