எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்கள்; மாணவியின் உயர் கல்வி செலவை காஞ்சி சங்கர மடம் ஏற்பு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண்கள்; மாணவியின் உயர் கல்வி செலவை காஞ்சி சங்கர மடம் ஏற்பு
x

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவி துர்காவுக்கு உயர் கல்வி செலவை காஞ்சி சங்கர மடம் ஏற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம்,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்த திருச்செந்தூர் சங்கரா அகாடமி பள்ளி மாணவி துர்காவுக்கு பாராட்டு விழா சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன் மற்றும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனர் விசயராகவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிக்கு சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டு தெரிவித்தனர்.

மாணவி துர்காவின் உயர் கல்வி செலவை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சங்கர மடம் சார்பில் ஏற்றுக் கொள்வதாக காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் தெரிவித்தார்.


Next Story