மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி

மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி வருகிற 12-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் தனித்தனியாக பேச்சு போட்டி ராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 1 மணிக்கும் போட்டி தொடங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தேர்வுசெய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு சிறப்புப்பரிசு ரூ.2000 வழங்கப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.