ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி


ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி நடக்கிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா வரும் 21-ந்தேதி அரசு மருத்துவ கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் காலை முதல் கருத்தரங்கம், கவியரங்கம், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி மற்றும் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலை பரிசளிப்பு விழாவில் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், மெய்யநாதன், சி.வி.கணேசன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், கலெக்டர் விஷ்ணு சந்திரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனையொட்டி ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலை பள்ளியில் ஏழை பங்காளர் கலைஞர் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் கோபு கலந்து கொண்டார். போட்டியில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்று 21-ந்தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும். நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் கண்ணா கருப்பையா, தமிழ் வளர்ச்சிதுறை உதவி இயக்குனர் சபீர்பானு, மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story