மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
காந்தி பிறந்தநாளையொட்டி தேனி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தி பிறந்தநாளையொட்டி தேனி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் ஆகிய தலைப்புகளில் போட்டி நடக்கிறது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடக்கிறது. போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் பரிந்துரை படிவம் வாங்கி வர வேண்டும். போட்டியில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.