மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.
வேலூர்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் 10 பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்கள் கலந்து கொண்டு கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேசினர்.
வேலூர் தனலட்சுமி தஞ்சாவூர் ஓவிய கலைக்கூடம் நிறுவனர் செல்வகணேஷ், ஊரிசு கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் திருஇன்பஎழிலன், குண்ராணி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப்அன்னையா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசளிக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story