பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி


பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
x
தினத்தந்தி 19 July 2023 2:00 AM IST (Updated: 19 July 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச நீதி தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.

நீலகிரி

ஊட்டி

சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கினார். இதில் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, போக்சோ சட்டம், குழந்தை திருமணம் ஆகிய தலைப்புகளில் போட்டி நடந்தது. போட்டியில் ஊட்டி அன்னை சத்தியா காப்பக மாணவி பூர்ணஸ்ரீ முதலிடம், தூனேரி அரசு பள்ளி மாணவி திலகம் 2-ம் இடம், கூடலூர் அரசு மாதிரி பள்ளி மாணவி அனீஸ் பாத்திமா 3-வது இடத்தை பிடித்தனர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000-த்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான லிங்கம், நீலகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் சிவக்குமார், வக்கீல்கள் விஜயன், பாலநந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story