வன உயிரின வார விழாவையொட்டிபள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ஒவ்வொரு ஆண்டும் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தொடங்கி வைத்தார். வன சரகர்கள் பெருமாள், ரவிச்சந்திரன், சக்தி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களுக்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 9 முதல் பிளஸ்-2 வரை என 3 பிரிவுகளாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பின்னர் பரிசுகள் வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.