அகரம் முத்தாலம்மன் கோவிலில் நவசண்டி மகா யாகம்


அகரம் முத்தாலம்மன் கோவிலில் நவசண்டி மகா யாகம்
x
தினத்தந்தி 7 March 2023 2:00 AM IST (Updated: 7 March 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

அகரம் முத்தாலம்மன் கோவிலில் நவசண்டி மகா யாகம் நடைபெற்றது.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மற்றும் அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்வதற்கான நவசண்டி மகா யாக பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைகளுடன், யாக பூஜை தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று நவசண்டி மகா யாகத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், கம்பு, சோளம் உள்ளிட்ட நவதானியங்கள், 108 வகை மூலிகை பொருட்கள் மற்றும் புடவைகளை போட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அகரம் முத்தாலம்மன் கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து, தொழில் அதிபர் மேகநாதன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story