வித்யாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு


வித்யாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சரஸ்வதி விளாகத்தில் உள்ள வித்யாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய வித்யாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டது. அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத ஓதுவார்கள் தேவாரம் இசைக்க குழந்தைகள் நெல் மணிகளில் எழுத, அவர்களது நாவில் கோவில் அர்ச்சகர் தேன் கொண்டு தமிழின் முதல் எழுத்தான அ. வை எழுதினார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story