தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி துணை தேர்வுக்கு தயாராக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி துணை தேர்வுக்கு தயாராக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறப்பு பயிற்சி
இதுகுறித்து மாநில ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து கற்போம் என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் கல்வி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு அந்தந்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்படி வருகிற 30-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தேர்வுகள்
இத்திட்டத்தில் குறைந்தபட்ச கையேடுகளை பயன்படுத்தி வாராந்திர தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். சனிக்கிழமை தோறும் ஊக்கமூட்டுதல், வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் அனைவரும் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த நடவடிக்கை எடுத்தல் அவசியம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.