ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை


ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
x

ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

திருப்பூர்

உடுமலை

உடுமலை தில்லைநகரில் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ரத்தினலிங்கேஸ்வரர், ரத்தினாம்பிகை, விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, அய்யப்பசாமி, சண்டிகேஸ்வரர், கால பைரவர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், அஷ்டதிக்நாகர்கள் ஆகிய கடவுள்கள் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் பிரதோஷம், கிருத்திகை, பவுர்ணமி, மகா சிவராத்திரி, கந்த சஷ்டி, நவகிரகங்கள் பெயர்ச்சி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று சனி மகாபிரதோஷத்தை முன்னிட்டு ரத்தினலிங்கேஸ்வரர் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பழச்சாறு, விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ரத்தினலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்துடன் ரத்தினாம்பிகையுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளியும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போன்று திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மலை மீது உள்ள பஞ்சலிங்கங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

----------------


Next Story