சிறப்பு மருத்துவ முகாம்

சிவகங்கை அடுத்த கண்டாங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சிவகங்கை அடுத்த கண்டாங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மந்தக்காளை தலைமையில் நடைபெற்றது. முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார். டாக்டர்கள் ஆனந்தராஜ், ஹேமலதா, வினோதினி ஜெயபிரபா, தீபிகா, ரேகா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, இ.சி.ஜி., ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. 622 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவகுமார், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் சதிஷ், கிராம செவிலியர் மீனாம்பாள் மற்றும் செவிலியர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.






