சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 8 March 2023 6:45 PM (Updated: 8 March 2023 6:45 PM)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பிரேமலதா தலைமை தாங்கினார். கடையநல்லூர் அரசு தலைமை மருத்துவர் அனிதா பாலின் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு தாய்-சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டது.

மாவட்ட சித்தர் மருத்துவ அலுவலர் உஷா, தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ், நகரமன்ற உறுப்பினர் திவான் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் டாக்டர் கார்த்திக் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.


Next Story