பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 8-ந்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு உடனடி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் மற்றும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் வரும் 15-ந்தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story