பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்


பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 May 2024 11:07 PM IST (Updated: 21 May 2024 11:58 AM IST)
t-max-icont-min-icon

பவுர்ணமி, வார இறுதி நாட்களில் மட்டுமே திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தட பஸ்களை கோயம்பேடு பஸ் நிலைத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் 23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு 24/05/2024 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டும் பரீட்சார்த்த முறையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களும் மற்றும் ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story