சமூக ஆர்வலர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
தூய்மை இந்தியா திட்டம் குறித்து சமூக ஆர்வலர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேறகொண்டுள்ளார்.
கன்னியாகுமரி:
தூய்மை இந்தியா திட்டம் குறித்து சமூக ஆர்வலர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேறகொண்டுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஆடிட்டரும், சமூக ஆர்வலருமான கோவிந்தன் உன்னி (வயது 58) கன்னியாகுமரி முதல் ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை நேற்று தொடங்கினார்.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தை விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், புதுடெல்லி, அரியானா, பஞ்சாப் வழியாக 5,500 கி.மீ. தூரம் பயணம் செய்து ஜூலை 19-ந் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்கிறார்.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி பாலக்காடு முதல் சென்னை வரை 28 நாட்கள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.