முண்டியம்பாக்கத்தில் பாலம் கட்டக்கோரி நாளை கடையடைப்பு
முண்டியம்பாக்கத்தில் பாலம் கட்டக்கோரி நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி ஒன்றியம் முண்டியம்பாக்கம்-ஒரத்தூர் சந்திப்பில் மேம்பாலம் கட்ட கோரி நாளை (வியாழக்கிழமை) முண்டியம்பாக்கத்தில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. இதற்கு தாசில்தார் ஆதிசக்தி சிவகுமரி மன்னன் தலைமை தாங்கினார். நகாய் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தெய்வீகன் வரவேற்றார். கூட்டத்தில் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக திட்டமிட்டப்படி நாளை போராட்டம் நடைபெறும் என போராட்டக்குழுவினர் அறிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் அ.தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி கருணாகரன், ரேணுகா ராஜவேல், மார்க்சிஸ்ட். கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி, சங்கரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், பா.ஜ.க, ரவி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.