ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


தினத்தந்தி 27 Oct 2023 12:30 AM IST (Updated: 27 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ வழிபாடு

தர்மபுரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முதலில் நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், உபகார பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

மகாலிங்கேஸ்வரர் கோவில்

இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனமர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு விபூதி, சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனமர் ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.


Next Story