சவுக்கு சங்கர் விவகாரம்: யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது


சவுக்கு சங்கர் விவகாரம்: யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது
x

அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்சை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து இருந்தது.

சென்னை,

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். முன்ஜாமின் கோரி பெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என மறுத்த நிலையில் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்சை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ்பாபு கூறி இருந்தார். முன்ஜாமின் மனு விசாரணையை ஒரு வார காலம் ஐகோர்ட்டு ஒத்தி வைத்திருந்த நிலையில் பெலிக்சை டெல்லியில் வைத்து திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் இருந்து பெலிக்ஸ் தமிழகத்திற்கு அழைத்து வரப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது.



Next Story