கழிவுநீர் கால்வாயில் தீ விபத்து


கழிவுநீர் கால்வாயில் தீ விபத்து
x
தினத்தந்தி 16 Oct 2023 2:45 AM IST (Updated: 16 Oct 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் தீ விபத்து ஏற்பட்டது.

நீலகிரி


ஊட்டி காந்தி சிலை சந்திப்பு பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்தநிலையில் நேற்று அதன் அருகே வங்கி முன்பு உள்ள மூடப்பட்ட கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பற்றியது. சற்று நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதற்கிடையே பெட்ரோல் நிலைய சேமிப்பு கலனில் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து ரசாயன நுரையை கால்வாயில் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் கூறுகையில், பெட்ரோல் நிலையத்தில் இருந்து 5 லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி சென்ற ஒருவர் தவறுதலாக கீழே கொட்டி விட்டார். இதற்கிடையே பெட்ரோல் நிலைய நிர்வாகத்தினர் தரையில் கொட்டிய பெட்ரோல் மீது தண்ணீர் ஊற்றி உள்ளனர். அந்த தண்ணீர் தாழ்வாக சென்று கால்வாய்க்குள் சென்று உள்ளது. அப்போது யாரோ சிகரெட் பிடித்து விட்டு நெருப்புடன் அதை தெரியாமல் கால்வாயில் வீசி சென்று உள்ளார். இதில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என்றார்.


Next Story