சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
x

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டை கொள்ளை சுப்புராயன் தெரு பகுதியில் கடந்த 20 நாட்களாக புதை வடிகால் இணைப்பில் அடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கழிவுநீரானது அத்தெருவில் வெள்ளம் போல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி அப்பகுதி மக்கள் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் அமர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

அதனைத்தொடர்ந்து மேயர் மகாலட்சுமி நேரில் அப்பகுதியை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விளங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். நேற்று மாலை சாலை பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story