மக்கள் நீதிமன்றத்தில் 196 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 196 வழக்குகளுக்கு தீர்வு
x

தஞ்சை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி, தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசின்தா மார்டின் தலைமையில் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காண தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் குடும்பநல வழக்குகளுக்கு குடும்பநல நீதிபதி இந்திராணி, குற்றவியல் நீதித்துறை முதலாவது நடுவர் சுசீலா, வக்கீல் முல்லை ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் தீர்வு காணப்பட்டது. முதன்மை சார்பு நீதிபதி நாகராஜன், விரைவு குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகேசன், வக்கீல் ராஜூ ஆகியோர் கொண்ட 2-வது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

196 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமர்வுகளோடு கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம் மற்றும் திருவையாறு ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளில் மொத்தம் 1,696 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 196 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 78 லட்சத்து 93 ஆயிரத்து 400 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது.சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஜெயஸ்ரீ, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி இந்திராகாந்தி மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்து இருந்தனர்.


Next Story