கரூரில் தற்காலிக கடைகள் அமைப்பு


கரூரில் தற்காலிக கடைகள் அமைப்பு
x

தீபாவளி பண்டிகையையொட்டி கரூரில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

கரூர்

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் கடைவீதிகளுக்கு சென்று புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்கி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூரில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பாக கரூர் ஜவகர்பஜாரில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.

தற்காலிக கடைகள்

பின்னர் ஜவகர்பஜாரில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தன. இந்தமுறை திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனையொட்டி இந்தாண்டு தற்காலிக கடைகள் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தற்காலிக கடைகளுக்கான பந்தல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அப்பகுதியில் தற்காலிக கடைகள் செயல்படும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story