பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி - பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி. உத்தரவு
பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) முக்கிய அறிவுப்பு ஒன்றை சுற்றறிக்கை மூலமாக அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், பல்கலைக்கழக வளாகங்களிலும், கல்லூரி வளாகங்களிலும் பேராசிரியைகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதே போன்று எந்த விதமான வன்முறை சம்பவங்களும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை மற்றும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக தனி கமிட்டி அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story