செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51-வது முறையாக நீட்டிப்பு


செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51-வது முறையாக நீட்டிப்பு
x

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தன. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை இன்று நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அல்லி, தள்ளி வைக்க முடியாது எனக் கூறி செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

குற்றச்சாட்டு பதிவை இழுத்தடிக்கும் நோக்கில், அவகாசம் கோரப்படுகிறது என அமலாக்கத்துறை தரப்பு தனது வாதத்தை வைத்துள்ளது. இதையடுத்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆகஸ்ட் 2ம் தேதி செந்தில் பாலாஜியை ஆஜர் படுத்தவும், நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story