குடோனில் பதுக்கிய 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


குடோனில் பதுக்கிய 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x

குடோனில் பதுக்கிய 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல நல அதிகாரி வேல்முருகன் தலைமையில் சுகாதார அதிகாரி கே.வாசுதேவன், துணை அதிகாரிகள் அலெக்ஸ்பாண்டியன், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழு நேற்று சென்னை சென்டிரல் அருகே வால்டாக்ஸ் சாலை, மன்னார் தெரு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கிய 1 டன் அளவு எடைகொண்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், டீ கப்புகள், ஸ்டிராக்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். குடோனின் உரிமையாளர் சந்திரமோகனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கும் கடைகள், குடோன்கள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் கொடுத்து, பிளாஸ்டிக் ஒழிப்பில் பங்கு பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story