தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு விறுவிறுப்பாக தயாராகும் தலைமைச் செயலகம்


தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு விறுவிறுப்பாக தயாராகும் தலைமைச் செயலகம்
x

சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு தலைமைச் செயலகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை,

2024-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் வரும் 12-ந்தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து 19-ந்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

இதையடுத்து 20-ந்தேதி முன்பண மானியக் கோரிக்கையும், 21-ந்தேதி முன்பணச் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொரை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சட்டப்பேரவை மண்டபம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்டவை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. தலைமைச் செயலகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சட்டமன்ற உறுப்பினர் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த பணிகள் அனைத்தையும் இன்றே முடிக்குமாறு பணியாளர்களுக்கு சட்டப்பேரவை செயலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story