வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்'


வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
x

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு உரிய வாடகை செலுத்தாத 5 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு உரிய வாடகை செலுத்தாத 5 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சொத்துவரி

ராமநாதபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30, மற்றும் 2-ம் அரையாண்டுக்கான தொகையை அக்டோபர் 31-ந் தேதியும் செலுத்துவதற்கு கடைசி நாளாகும். ஆனால் சிலர் சொத்து வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் மாதம் 31-ந்தேதி என தவறாக நினைத்து காலம் தாழ்த்தி வரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் அக்டோபர் மாதம் 31-ந்தேதி முடிவடைந்து விட்டது. எனவே ராமநாதபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்டவற்றை உடனடியாக நிலுவையின்றி செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எழுதிவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த எச்சரிக்கை அறிவித்த பின்பும் பல கடைகளில் வாடகை செலுத்தாமல் இருந்து வருவது தெரிய வந்துள்ளது.

குடிநீர் கட்டணம்

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரன் உத்தரவின்படி மேலாளர் நாகநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் மூலம் வாடகை செலுத்தாத 5 கடைகள் பூட்டி சீல் வைக்கப் பட்டது.

இந்த 5 கடைகளுக்கு ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்து 462 நிலுவைத் தொகையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 5-ந் தேதி வரை குடிநீர் கட்டணம் செலுத்தாத 12 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

எனவே நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடனடியாக தங்களின் குடிநீர் வரி, வாடகை கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றை உரிய காலத்திற்குள் செலுத்தி மேற்கண்ட நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story