மொரப்பூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு 'சீல்'

தர்மபுரி
மொரப்பூர்:
மொரப்பூரில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகே பீடா மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் பெட்டி கடை உள்ளது. இந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடையின் உரிமையாளருக்கு 2 முறை அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்தார். அப்போது, மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






