தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- டெண்டர் கோரியது சிப்காட்
அரசு, தனியார் பங்களிப்பின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் முதல்முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. முள்ளக்காடு கிராமத்தில் ரூ. 904 கோடியில் இதனை செயல்படுத்த சிப்காட் டெண்டர் கோரியுள்ளது.நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது .எனவும் அரசு, தனியார் பங்களிப்பின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story